பஞ்சாப் - பிரதமர் பாதுகாப்பு விவகாரம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள்.!  - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் குறித்த வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தில், "பிரதமர் பாதுகாப்பு குளறுபடி விசாரணையை யாரிடமும் விட்டுவிட முடியாது. இது எல்லை தாண்டிய பயங்கரவாத விவகாரம். தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த விசாரணைக்கு உதவலாம்" என்று தனது வாதத்தை முன்வைத்தார்.

மேலும், "பிரதமர் பாதுகாப்பு வாகனம் நின்று கொண்டிருந்த அந்த மேம்பாலத்தில், ஒரு குதிரைப் படை ஒன்று நின்று கொண்டிருந்தது. அங்கு ஒரே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மேம்பாலத்தின் பின்புறமும் கூடியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது பற்றி கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாது" என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், பிரதமரின் பயணம் குறித்த விபரங்கள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் பஞ்சாப் மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய மற்றும் மாநில விசாரணை அமைப்புகள் தங்களது முழு பதிவையும் சீல் வைத்து பாதுகாத்து ஒத்துழைக்க தேவையான உதவிகளை வழங்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வருகின்ற திங்கட்கிழமை வரை இந்த விசாரணையை நிறுத்துமாறு மத்திய மற்றும் பஞ்சாப் விசாரணைக் குழுக்களை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. 

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற திங்கட் கிழமை நடைபெறும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

punjam pm modi issue supreme court hearing


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->