அதிமுக (அ) பாஜக! யாருடன் கூட்டணி? பரபரப்பை கிளப்பிய புரட்சி பாரதம்! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த அதிமுக இன்று கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு மனதாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 

அதனை அறிக்கையாக அதிமுக துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான உடன் அதிமுக அலுவலகத்தின் வாயிலில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்த நிலையில் கே.வி குப்பம் சட்டமன்ற உறுப்பினரும் புரட்சி பாரத கட்சியின் தலைவருமான ஜெகன் மூர்த்தி அதிமுக தலைமையிலான கூட்டணியிலேயே நீடிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் "பாஜக உடனான கூட்டணி முறிவுக்கு காரணம் அண்ணாதுரை குறித்து அண்ணாமலை அவதூறாக பேசியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பாஜக தரப்பில் இருந்து உரிய விளக்கம் இல்லை.

ஏற்கனவே ஜெயலலிதா அவர்களையும் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்டது. 

அதற்கு உரிய மரியாதை அளிக்காததால் கூட்டணியை முறித்துள்ளனர். இது அதிமுகவுக்கு நல்ல விஷயம் தான். அண்ணாதுரை குறித்து விமர்சனம் செய்த பாஜகவை அதிமுக மட்டுமல்லாது திமுகவும் கேள்வி கேட்டிருக்க வேண்டும். திமுகவை உருவாக்கிய அண்ணாவை குறித்து அவதூறாக பேசிய வரை திமுக தான் முதலில் கேள்வி கேட்டிருக்க வேண்டும். நான் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பயணிப்பேன்" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puratchi Bharatham JaganMoorthy announced continue in AIADMK alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->