ஈஷா ஜக்கி வாசுதேவும்., திமுக அமைச்சரும் அந்த வழியில் பார்ட்னர்.! உடன்பிறப்புகளுக்கு பீதியை கிளப்பிய பியூஸ்.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இந்த யோகா  மையத்தை சத்குரு ஜக்கிவாசுதேவ் கடந்த 1992ஆம் ஆண்டு நிறுவினார். மேலும் கடந்த 2017ம் ஆண்டு 112 அடி உயரம் உடைய ஆதியோகி சிலை ஒன்றை நிறுவினார்.

அதுமட்டுமல்லாமல் இந்து மக்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மையமாக இதனை மாற்றியுள்ளதாக அறிவித்தார். ஈசா யோகா மையத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகில் பல நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து, தங்கி யோகப்பயிற்சி, ஆன்மீகம் உள்ளிட்டவைகளை பெற்று செல்கின்றனர்.

அதே சமயத்தில் இந்த ஈஷா யோகா யானைகளின் வழித்தடங்களை மறித்து கட்டப்பட்டுள்ளதாகவும், வனப்பகுதி நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், ஈஷா யோக மையம் வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதா? யானைகளின் வழித்தடங்களை மறித்து அமைக்கப்பட்டுள்ளதா? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப் பட்டது.

இதற்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, இந்த மைய கட்டுமானத்திற்காக வனப்பகுதியில் நிலங்கள் எதுவும் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. யானைகள் வழித்தடம் எதுவும் இந்த மையம் உட்பட்ட பகுதியில் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக ஈஷா யோக மையம் யானை வழித்தடத்தில் தான் கட்டப்பட்டுள்ளது., வனப்பகுதியை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டு உள்ளது., காடுகளை அழித்து தான் கட்டப்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்த நிலையில், தமிழக அரசின் இந்த பதில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

இந்த நிலையில், பியூஸ் மானுஷ் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திமுக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுன் ராஜனுடைய பார்ட்னர்., ராஜன் ஜக்கி வாசுதேவ் பார்ட்னர்., பின்னர் எப்படி ஈசா யோகா மையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள்? என்ற தோணியில் பதிலளித்துள்ளார்.

சத்குரு ஜக்கி வாசுதேவ்.,க்கும் திமுக அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக பியூஸ் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puyush manush say about dmk minister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->