எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி அடுத்தடுத்து சிறைக்கு செல்வது உறுதி, வருகிறது தீர்ப்பு - சற்றுமுன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


எடப்பாடி பழனிசாமி மீதான 4800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கை, சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை, உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சற்று முன்பு செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்ததாவது,

"எடப்பாடி பழனிசாமி மீதான 4800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கில் உரிய முறையில் விசாரணை நடக்க வேண்டும். அதனை யார் விசாரிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு கவலை இல்லை.

இந்த டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு வருகின்ற பொழுது எங்களுடைய வாதங்களை முன்வைப்போம். நல்ல தீர்ப்பு வரும். விரைவில் உள்ளே போக வேண்டியவர்கள் போவார்கள். அனுபவிக்க வேண்டியவர்கள் அனுபவிப்பார்கள். 

ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். இதனை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். வேலுமணியின் வழக்கு நேற்று தான் வந்தது. இன்றைக்கு எடப்பாடி, அடுத்து கொடநாடு இப்படி பல காட்சிகளை நீங்கள் காண இருக்கிறீர்கள்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் கண்டனர் லாரியில் 570 கோடி ரூபாய் பணம் பிடிப்பட்டது. இதுகுறித்து சிபிஐ இதுவரை விசாரணை செய்யவில்லை" என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

R S Bharathi say about eps spv case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->