அதானிக்கு முட்டு கொடுக்கும், ஐநா-வால் துரத்திவிடப்பட்ட 'தமிழ்நாடு அரசின்' காலநிலை ஆலோசகர்!
Ra Arul Say About TNGOvt council on Climate Change
பசுமை தாயகம் அமைப்பை இரா அருள் ஒரு அதிர்ச்சியான உண்மையை வெளி கொண்டுவந்துள்ளார். அதில், 'தமிழ்நாடு அரசின்' காலநிலை ஆலோசகர் அதானி நிறுவனம் பசுமையான நிறுவனம் என்று சொல்லியிருப்பதை அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து விசாரணை வேண்டும் என்கிற குரல் இந்தியா முழுவதும் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் காலநிலை செயல்திட்ட (Tamil Nadu Climate Mission) ஆலோசகர் எரிக் சோல்ஹிம் அதானிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்துக்கு முதல் காரணமாக இருப்பது நிலக்கரி தான். உலகெங்கும் நிலக்கரி சுரங்கம் மற்றும் நிலக்கரி அனல்மின் திட்டங்களை திணிப்பதால் 'நிலக்கரி ராஜா' என்று பெயர்பெற்றவர் அதானி. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அதானி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் பெரும் சுற்றுச்சூழல் கேடுகளை ஏற்படுத்தி வருகின்றன.
காலநிலை மாற்றத்துக்கு எதிரான மக்கள் அமைப்புகள் பலவும், அதானி நிறுவனத்தின் நிலக்கரி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராடி வருகின்றன. இந்நிலையில், அதானி நிறுவனத்தை ஒரு பசுமை நிறுவனமாக பிரச்சாரம் செய்கிறார் எரிக் சோல்ஹிம்! இவரே தமிழ்நாடு அரசின் காலநிலை திட்டத்தின் ஆலோசகராகவும் இருப்பது விநோதமானது ஆகும்.
அதானி மீதான விசாரணையை திமுக கோரும் அதே தருணத்தில், அதானி நிறுவனம் அளித்துள்ள மறுப்பு அறிக்கையை தனது கீச்சு (டிவிட்டர்) பக்கத்தில் பகிர்ந்து அதானிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் எரிக் சோல்ஹிம்.
குறிப்பு: நார்வே நாட்டை சேர்ந்த எரிக் சோல்ஹிம், ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP - UN Environment Programme) இயக்குநராக இருந்தார். ஆனால், நிதி முறைகேடுகள் காரணமாக ஐநா பொதுச்செயலாளரால் 2018இல் ஐநாவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவில் (Tamil Nadu Governing Council on Climate Change) எரிக் சோல்ஹிம் இடம்பெற்றுள்ளார்.
English Summary
Ra Arul Say About TNGOvt council on Climate Change