அதிமுக தலைமையில் மாற்றம்.. "செய்தி வருதே".. கொளுத்தி போட்ட ரகுபதி.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் நாளை நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற்ற பிறகு அதிமுகவில் பிளவு உண்டாக்கும் வேலையை பாஜக செய்யும் என திமுக அமைச்சர் ரகுபதி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அமைச்சராக தற்போது இருக்கும் ரகுபதி இதற்கு முன்பு அதிமுக ஆட்சியில் முதன்முதலில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர். பின்னர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவுக்கு சென்ற அவர் தற்போது ஸ்டாலின் தலைமையிலான அரசின் சட்டத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில் "தேர்தலுக்குப் பின் செங்கோட்டையன் அல்லது எஸ் ப வேலுமணி தலைமையில் அதிமுக இயங்கும் என செய்தி வருகிறது. அதிமுகவில் பிளவு உண்டாக்கும் வேலையை நாங்கள் செய்ய மாட்டோம். அதை பாஜக செய்யும். சவுக்கு சங்கர் மீது பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை" என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raghupathi said next AIADMK gs senkottaiyan or velumani


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->