காங்கிரஸ் தேர்தலில் முறைகேடா? ராகுல் காந்தியால் ஏற்பட்ட சர்ச்சை.!  - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் 17ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்ற இந்த தேர்தலில் சசிதரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே இருவரும் நேரடியாக போட்டியிட்டனர்.

இந்த தேர்தலின் வாக்குப்பதிவு 17ஆம் தேதி நடந்த நிலையில், அக்டோபர் 19ஆம் தேதியான நேற்று காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராகிறார்.

இந்த ராகுல் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாருமே இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இத்தகைய சூழலில், மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் தலைவராக வெற்றி பெற்ற நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குள் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி குறித்த முடிவுகளுக்கு கார்கேவை கேளுங்கள் என்று கூறி இருந்தார். 

இந்த விஷயமானது, " முடிவுகள் வெளியாவதற்கு முன் மல்லிகார்ஜுனே கார்கே தான் தலைவர் என்று ராகுல் காந்தி எப்படி கூறினார். அப்போது தேர்தல் வெறும் கண்துடைப்பா?" என்று சர்ச்சைகள் கிளம்பியது. 

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அவர் செய்தியாளர்களை அன்று தாமதமாக தான் சந்தித்தார் என்றும், அதற்க்குள் தேர்தல் முடிவுகளின் நிலை அனைவருக்கும் தெரியவந்துவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragul ganthi speech make issue about congress president 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->