திடீர் திருப்பம்.. அமேதி தொகுதியில் "ராகுல் காந்தி" மீண்டும் போட்டி.!!
Rahul Gandhi again contest in Amethi constituency
கடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் உத்தரபிரதேச மாநிலம் அமைதி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அதன்படி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்திர பிரதேச மாநிலம் அமேதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார்.
இதனை பாஜக கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. வடக்கே தோற்றுப்போன ராகுல் காந்தி பயந்து தெற்கே சென்று விட்டதாக பாஜக தரப்பு விமர்சனம் செய்திருந்த நிலையில் தற்போது நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட்டு உளளார்.
அதேபோன்று உத்தரபிரதேச மாநிலம் அமைதி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் அறிவித்துள்ளார். மேலும் லேபர் அலி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சோனியா காந்திக்கு பதிலாக தற்போது பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rahul Gandhi again contest in Amethi constituency