ரஷ்யா போரை தடுத்து நிறுத்திய பிரதமர் மோடியால் வினாத்தாள் கசிவை தடுக்க முடியவில்லை - ராகுல் காந்தி கடும் தாக்கு ..!! - Seithipunal
Seithipunal


மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது மற்றும் கருணை அடிப்படையில் சில மாணவர்களுக்கு மதிப்பெண் அளித்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பூதாகாரமாக கிளம்பியுள்ளன.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையை உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்நிலையில் தான் அதே தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்ட பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர்களுக்கான யூஜிசி நெட் தேர்வும் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ரத்து செய்யப் பட்டுள்ளது. 

இது மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "நீட் தேர்வைத் தொடர்ந்து யூஜிசி நெட் தேர்விலும் வினாத்தாள் கசிந்துள்ளதாக தெரிய வந்ததையடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் தான் இந்த முறைகேடுகள் நடைபெறுகின்றன. இந்த தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாங்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவோம். 

பிரதமர் மோடி தான் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை தடுத்து நிறுத்த உள்ளதாக பாஜகவினர் கூறுகின்றார். அப்படிப்பட்ட பிரதமரால் இந்த வினாத்தாள் கசிவை தடுக்க முடியவில்லை என்பது தான் நமது துரதிர்ஷ்டம்" என்று கடுமையாக தாக்கியுள்ளார் ராகுல் காந்தி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi Attacking PM Modi On NEET And NET Issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->