ராகுல்காந்திக்கு 1000 ரூபாய் வழங்கவேண்டும் - ஆர்எஸ்எஸ் பிரமுகருக்கு நீதிமன்றம் உத்தரவு.!
rahul gandhi rss case court order
ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ராஜேஷ் குண்டே என்பவர், மகாராஷ்டிர மாநிலம் தானே நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று ராஜேஷ் குண்டே மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நிராகரித்த நீதிபதி அவர்கள், மனுதாரர் ராஜேஷுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அந்த தொகையை ராகுல் காந்திக்கு வழக்கு செலவுக்காக வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற மே மாதம் ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். அன்றையதினம் புகார்தாரர் ராஜேஷ் குண்டேவிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்று ராகுல் காந்தியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
English Summary
rahul gandhi rss case court order