நாட்டை பிரிப்பதே நரேந்திர மோடியின் நோக்கம் - ராகுல் காந்தி!
Rahul Gandhi say about Narendra Modi divide country
நாட்டை பிரிப்பதே நரேந்திர மோடியின் நோக்கம். ஆனால், இந்தியா அனைவருக்குமானது என்பதே காங்கிரசின் நோக்கம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விதிப்பு ஆகியவற்றை எதிர்த்து இன்று புதுடில்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்ததாவது,
"நாட்டில் வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது. பயத்தின் பிடியில் தேசம் உள்ளதால் இரண்டு தொழிலதிபர்கள் பயனடைகின்றனர். உங்களின் பைகளில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
மோடி ஆட்சியில் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழைகளின் முதுகெலும்பை மோடி உடைத்துவிட்டார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை. இதனால், வேலையின்மை அதிகரித்து கொண்டே வருகிறது.
எரிபொருள் விலையும், அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. மீடியாக்களை இரண்டு தொழிலதிபர்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர். இவர்கள் உதவியில்லாமல் மோடி பிரதமர் பதவியில் நீடிக்க முடியாது.
மத்திய அரசு எங்களை துன்புறுத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது. 55 மணி நேரம் அமலாக்கத்துறை என்னிடம் விசாரணை நடத்தியது. இதைப் பற்றி எனக்கு கவலையில்லை.
இந்தியா அரசியல் சாசனத்தின்படியே இயங்கும். நாட்டை பிரிப்பதே நரேந்திர மோடியின் நோக்கம். ஆனால், இந்தியா அனைவருக்குமானது என்பதே காங்கிரசின் நோக்கம்". என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Rahul Gandhi say about Narendra Modi divide country