எலான் மஸ்கிற்கு ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி - என்ன விஷயம் தெரியுமா?!
Rahul Gandhi Supports Elan Musk
அமெரிக்க அரசியல்வாதியான ராபர்ட் எப் கென்னடி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டு இருந்தார். இதையடுத்து கென்னடியின் பதிவை ரீ ட்வீட் செய்து, அதில் மேலும் சில குறிப்புகளுடன் டெஸ்லா நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் பதிவிட்டு இருந்தார்.
அவரது அந்த பதிவில், "மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் சிறிய அளவில் முறைகேடு நடந்தாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த மின்னணு இயந்திரங்களில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிக எளிதாக முறைகேடு செய்ய முடியும். எனவே இந்த மின்னணு இயந்திரங்கள் தேவை இல்லாத ஒன்று " என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் எலான் மஸ்கின் இந்த பதிவை ரீ ட்வீட் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டு உள்ளார். அதில் அவர், "இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வெளிப்படைத் தன்மை குறித்து அனைவருக்கும் சந்தேகங்கள் உள்ளன.
தேர்தலின் வெளிப்படைத் தன்மைக்கு யாரும் பொறுப்பேற்காத போது ஜனநாயகம் மோசடிக்கு உள்ளாகிறது. இங்கு யாரும் மின்னணு இயந்திரங்களை ஆராய அனுமதிக்கப் படுவதில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை மின்னணு வாக்கு இயந்திரம் தேவை இல்லாதது. அது ஒரு கருப்பு பெட்டி" என்று ராகுல் காந்தி எலான் மஸ்கின் கருத்துக்கு ஆதரவாக பதிவிட்டு உள்ளார்.
English Summary
Rahul Gandhi Supports Elan Musk