தமிழகத்தில் ராகுல் காந்தி நடத்தும் 'இந்திய ஒற்றுமை யாத்திரை' நடைபயணம்..!
Rahul Gandhi's 'Indian Unity Yatra' walk in Tamil Nadu..!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் நிலையில், அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காகவும், தொண்டர்கள் கூட்டத்தை திரட்டுவதற்காகவும், தமிழக காங்கிரஸ் சார்பில், கோடிக்கணக்கில் நிதி வசூலிக்கப்பட்டு வந்தது.
வருகிற செப்டம்பர் மாதம் 7 -ந்தேதி கன்னியாகுமரியில் 'இந்தியா எல்லாருக்குமான நாடு' என்ற கோஷத்துடன் ராகுல் காந்தி நடைபயணத்தை துவக்குகிறார். இந்த நடைபயணத்திற்கு, 'இந்திய ஒற்றுமை யாத்திரை' என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த நடைபயணம், 148 நாட்களில், 3,700 கி.மீ., துாரம் கடந்து, காஷ்மீரில் முடிப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, தமிழகத்தில் நடைபயணம் செல்லும் ராகுல் காந்திக்கு வரவேற்பு அளிக்கவும், அவர் நடந்து செல்லும் போது அவருடன் செல்ல கூட்டத்தைத் திரட்டவும், ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், திராவிட கட்சிகளின் மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களை போல, நடைபயணத்திற்கும் வாகனங்களை ஏற்பாடு செய்யவும், தொண்டர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வழங்கவும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடைபயணத்துக்கான செலவுக்கு, கட்சியில் இருந்து பணம் தரப்படாது என்பதால், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வசூலிக்குமாறு, மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் இந்த நடைபயண நிகழ்ச்சிக்கான செலவுக்கு தாராளமாக பணம் வழங்குமாறு, கட்சியினருக்கு மேலிடதிலிருந்தும் கோரிக்கை விடபட்டுள்ளது.
இது நடைபயணம் தொடர்பாக, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள் அன்பரசு, தன் நான்கு மாத ஓய்வூதியமான 1 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து, எம்.பி.,க்களில் அதிகபட்சமாக கார்த்தி சிதம்பரம் 30 லட்சம் ரூபாயும், முன்னாள் பொருளாளர் நாசே ராமச்சந்திரன் 25 லட்சம் ரூபாயும், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் 20 லட்சம் ரூபாயும்,வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.
பிற எம்.பி.,க்கள் தலா 15 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரில், பணம் படைத்த ரூபி மனோகரன், அசோகன், ஊர்வசி செல்வராஜ் போன்றவர்களிடம் தலா 25 லட்சம் ரூபாயும், மற்ற எம்.எல்.ஏ.,க்களிடம் தலா 5 லட்சம் ரூபாயும் வசூலிகாக்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது.
English Summary
Rahul Gandhi's 'Indian Unity Yatra' walk in Tamil Nadu..!