பிரியங்காவை முத்தமிட்டு.. அன்பை பரிமாறிய ராகுல் காந்தி.! - Seithipunal
Seithipunal


தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு கட்டி அணைத்து பாசத்துடன் ராகுல் காந்தி முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி கன்னியாகுமரியில் ஒற்றுமை பயணத்தை ஆரம்பித்து காஷ்மீரில் முடிக்கவுள்ளார். பல மாநிலங்களில் நடந்த இந்த ஒற்றுமை பயணம் இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் துவங்கியது. அப்பொழுது, ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் நுழைந்தபோது தங்கை பிரியங்கா காந்தி அவரை வரவேற்றார்.

3000 கிலோ மீட்டரை கடந்து அவர் உத்தரப்பிரதேசத்தில் கால் வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக ராகுல் காந்திக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து கூறினார். அப்பொழுது, நிகழ்ந்த ஒரு பொதுக்கூட்டத்தில் இருவரும் சேர்ந்து பங்கேற்றனர். 

அதில் இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டிருந்தபோது அண்ணன் ராகுல் காந்தி மிகவும் பாசத்துடன் தங்கையின் தலையை கோதி தலையில் அன்பாக முத்தமிட்டார். இருவரும் நெகிழ்ச்சியுடன் அன்பை பரிமாறிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Ganthi kisses Priyanka Ganthi Viral Video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->