பிரசாரத்திற்கு தமிழகம் வரவுள்ள காங்கிரஸ் முக்கிய புள்ளிகள்.! யார் யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய மூவரும் தமிழகத்திற்கு வர உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அடுத்த வார இறுதியில் இருந்து இவர்கள் வர உள்ளனர். ஒரே நாளில் ராகுல் காந்தி 3 இடங்களில் பிரசாரக் கூட்டம் நடத்தி பேசும் வகையில் பயணத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

ராகுல் காந்தி செல்ல முடியாத இடங்களுக்கு பிரியங்காவும் கார்கேவும் செல்ல உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இவர்கள் செல்லும் வகையில் பயண திட்டங்கள் தயார் செய்து டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

தலைவர்கள் வருகைக்கான தேதி உறுதி செய்த பிறகு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என காங்கிரஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahulgandhi Priyanka Kharge campaign issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->