மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதி வாரிய கணக்கெடுப்பு! - ராகுல் காந்தி உறுதி!
RahulGandhi promise caste based census in congress alliance reign
மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. அதன் ஒரு பகுதியாக மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் முதல் பணியாக சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது "ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியும் மகாத்மா காந்தியும் உள்ளனர். இன்னொரு புறம் பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் கோட்சே உள்ளனர். வெறுப்புணர்வு வன்முறையும் ஒரு புறம் உள்ள நிலையில் மறுபுறம் அன்பு, மரியாதை, சகோதரத்துவம் உள்ளது.
பாஜகவினர் எங்கு சென்றாலும் வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள். அதனால் தான் மத்திய பிரதேச விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் பாஜகவை வெறுக்க தொடங்கிவிட்டனர். நாட்டில் ஊழலின் மைய புள்ளியாக மத்திய பிரதேசம் உள்ளது.
இந்தியாவில் எத்தனை தாழ்த்தப்பட்டவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பொது பிரிவினர் உள்ளனர் என்ற கேள்வி கேட்டால் யாராலும் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்" என உறுதிப்பட பேசியுள்ளார்.
English Summary
RahulGandhi promise caste based census in congress alliance reign