அமெரிக்காவில் அவமானப்பட்ட ராகுல்காந்தி?! வைரல் வீடியோ! - Seithipunal
Seithipunal


கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி இருந்த காங்கிரஸ், தொடர்ந்து மூன்று மூன்றாவது முறையாக மக்களவைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்து வருகிறது. 

கடந்த இரண்டு மக்களவைத் தேர்தலை காட்டிலும், தற்போது நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு வலுவான கூட்டணியை அமைத்து போட்டியிட்டது. இருப்பினும் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு பிற்பகுதியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, கம்னியூஸ்ட் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ஐஎன்டிஐ கூட்டணி (INDIA) என்ற கூட்டணியை வலுவாக கட்டமைக்க தொடங்கினர். 

இது பல்வேறு சிக்கல்களை தாண்டி ஒருவழியாக 2024 தேர்தல் கடந்து தற்போது வரை நீடித்து வருகிறது. ஆனால் இதில் மாநில அளவில் நடக்கும் தேர்தல்களில் இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளே எதிர் எதிர் முனையில் களம் கண்டு வருகின்றனர்.

இந்த ஐஎன்டிஐ கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்ற பெயரை காங்கிரஸ் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் அழைத்து வருகின்றனர். அதே சமயத்தில் இது தவறான பெயர் என்றும், ஐஎன்டிஐ "ஏ" என்பது கூட்டணியை குறிக்கும் என்பதால், இதனை இண்டி கூட்டணி என்றுதான் அழைக்க வேண்டும் என்று, பொதுப்படியாக உள்ள செய்தி ஊடகங்களும், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த கூட்டணியை இண்டி கூட்டணி என்றே அழைத்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் இண்டி கூட்டணி என்று அழைப்பவர்கள் அனைவருமே பாஜகவை சேர்ந்தவர்கள் என்று காங்கிரஸ், திமுக கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டினர். இதனை தொடர்ந்து பொதுவான நடுநிலையோடு இருந்த சில செய்தி ஊடகங்கள் கூட இண்டி கூட்டணி என்று அழைப்பதற்கு பதிலாக இந்தியா கூட்டணி என்றே அழைக்க தொடங்கினர். 

இந்த நிலையில், அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர், இந்தியா கூட்டணியை இண்டி கூட்டணி என்று குறிப்பிட்டார். அதற்கு ராகுல்காந்தி இண்டி கூட்டணி என்று அழைக்காதீர்கள், அது "இந்தியா கூட்டணி" என்று தெரிவித்தார்.

அதற்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர், இந்தியா அதில் ஏ-க்கு என்ன அர்த்தம் என்று கேட்டார்? ராகுல் காந்தி அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறியதுடன், இது ஒற்றுமையை குறிக்கும்.. அப்படி,, இப்படி என்று சமாளித்தார். 

ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே சிரிக்கத் தொடங்கினர். நிகழ்ச்சியில் நேர்காணல் கண்டவர் கூட சிரிக்க தொடங்கினார். 

இந்த காணொளியை தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அமெரிக்கா சென்று அமெரிக்கர்களை முட்டாளாக்க நினைத்த ராகுல் காந்தி அவமானப்பட்டு இருப்பதாக பாஜகவினர் கலாய்த்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahulgandhi USA INDI Alliance


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->