ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பலி!...மோடியை கடுமையாக சாடிய ராகுல் காந்தி! - Seithipunal
Seithipunal


பீகாரில்  ரயில்  பெட்டிகளை இணைக்கும் போது, ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பலியான நிலையில், ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பீகாரில் உள்ள பரோனி ரயில் நிலையத்தில், ரயில்  பெட்டிகளை இணைக்கும் பணி நடைபெற்றது. அப்போது இரண்டு பெட்டிகளுக்கு இடையே,  ரயில்வே ஊழியர் ஒருவர் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பான  புகைப்படம், மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சாமானியர்கள் எப்போது பாதுகாப்பாக இருப்பார்கள் பிரதமர் மோடிஜி அவர்களே? நீங்கள் எப்போதும்  அதானியை பாதுகாப்பதில் மட்டுமே பிஸியாக இருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய ரயில்வேயின் நீண்டகால அலட்சியம், புறக்கணிப்பு மற்றும் வேண்டுமென்றே ரயில்வே பணிகளுக்கு குறைந்த ஆட் சேர்ப்பு ஆகியவற்றின் விளைவுதான் இந்த பயங்கரமான படம் மற்றும் செய்தி என்று விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Railway employee crushed to death rahul gandhi slammed modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->