போலீஸ் ஏட்டுவை தாக்கிய பாஜக முன்னாள் எம்.பி., மீது வழக்கு! - Seithipunal
Seithipunal



ராஜஸ்தான் மாநிலத்தில், தலைமை காவலரை (போலீஸ் ஏட்டு) தாக்கியதாக, பாஜக முன்னாள் எம்பி கிருஷ்ணேந்திர கௌர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் முன்னாள் பரத்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்திர கௌர். பாஜகவின் முன்னாள் எம்பி,யான இவர், சம்பவம் நடந்த கடந்த வெள்ளிக்கிழமை இரவு அகாத் திராஹாவில் தனது காரை நடுரோட்டில் நிறுத்தி உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

அந்நேரம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் கஜ்ராஜ் சிங், காரை எடுத்து செல்லும்படி கிருஷ்ணேந்திர கௌர் கூறியிருக்கிறார். 

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணேந்திர கௌர், தலைமை காவலரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் தலைமை காவலர் கஜ்ராஜ் சிங் புகார் புகார் அளிக்கவே, பாதுகாப்பு அதிகாரிகளை தடுத்ததாகவும், காவலரை தாக்கியதாகவும் பாஜக முன்னாள் எம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விரைவில் விசாரணை செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று, காவல் உதவிக் கண்காணிப்பாளர் அனில் மீனா தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan BJP Ex MP Attack Police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->