ராஜேந்திரபாலாஜி ஜாமீன் வழக்கு: அந்த 3 பேரையும் கைது செய்ய தடை உத்தரவு.! தமிழக அரசுக்கு கிடுக்குப்புடி கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


ராஜேந்திரபாலாஜி ஜாமீன் வழக்கை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், "ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனுவை இன்று விசாரணைக்கு செய்ய இருந்தோம், அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம் அவசரமாக ராஜேந்திரபாலாஜியை ஏன் கைது செய்தீர்கள்? இதில் அரசியல் நோக்கம் உள்ளதா? ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய வழக்கறிஞர்களை எல்லாம் ஏன் தொந்தரவு செய்தீர்கள்? என்றும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்க்கு தமிழக அரசு தரப்பில், "அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. ராஜேந்திர பாலாஜி மீது ஏராளமான புகார்கள் குற்றச்சாட்டுகள் எழுந்ததன் காரணமாக தான் அவரை நாங்கள் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அப்படி இருக்கும் சூழ்நிலையில், ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதற்கு ஏன் இவ்வளவு அவசரம் காட்டினீர்கள்? தற்போது நோய் தொற்று இருக்கும் நிலையில், உடனடியாக இதுபோன்ற வழக்குகளை பட்டியலிட்டு விசாரணை எடுத்துக்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று தமிழக அரசுக்கு கேள்வியை உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதனையடுத்து, ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் பாபுராய், பலராமன், முத்துப்பாண்டியன் ஆகிய 3 பேரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும், ராஜேந்திர பாலாஜி முன்ஜாமின் மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RAJENDRABALJI BAIL CASE JAN 6


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->