#BREAKING :: திமுகவின் மாணவர் அணி தலைவராக ராஜீவ் காந்தி நியமனம்! - Seithipunal
Seithipunal


திமுகவின் மாணவர் அணி நிர்வாகிகளை கட்சியின் பொதுச் செயலாளர் துறைமுருகன் நியமித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் சட்ட திட்டம் விதி 18,19 பிரிவின்படி மாநில மாணவர் அணி தலைவர், செயலாளர், இணை செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து திமுகவின் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளராக இருந்து வரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரா.ராஜீவ் காந்தி மாணவர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து திமுக மாணவர் அணி செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று திமுக மாணவர் அணி இணை செயலாளராக பூந்தமல்லி சேர்ந்த பூவை சி.ஜெரால்டு மற்றும் எஸ்.மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுகவின் மாணவர் அணி துணைச் செயலாளராக திருவாரூரை சேர்ந்த மன்னை த.சோழராஜன், சேலத்தை சேர்ந்த ரா.தமிழரசன், மதுரையைச் சேர்ந்த அதலை பி.செந்தில்குமார்.

சென்னையைச் சேர்ந்த கா.அமுதரசன், திருச்சியைச் சேர்ந்த பி.எம் ஆனந்த், திண்டுக்கல் சேர்ந்த கா.பொன்ராஜ், கோவையை சேர்ந்த வி.ஜி.கோகுல், சிவகங்கையை சேர்ந்த திருமதி பூரண சங்கீதா, ஈரோடு சேர்ந்த திருமதி ஜெ வீரமணி ஆகியோரை நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajiv Gandhi appointed as DMK student leader


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->