ஆபாசமாக பேசிய ஒற்றை எம்பி., சமயத்தில் ஷாக் கொடுத்த பெண் எம்பி.!
ramadevi mp complaint on bsp mp
பாஜக எம்பி ரமா தன்னிடம் ஆபாசமாக பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மக்களவையில், முத்தலாக் தடை சட்ட மசோதாவின் மீதான விவாதத்தின் பொழுது, பாஜக எம்பியும் துணை சபாநாயகருமான ரமா தேவி சிறிது நேரம் மக்களவையில் அவையை நடத்தினார். அச்சயம், சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம் கான் பேசினார்.
அவர் ரமா தேவியை பார்த்து கூறிய கருத்தானது, மிகவும் ஆபாசமாக இருந்ததாக கூறி மக்களவையில், சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும், எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பாஜக எம்பி ரமா தேவி அவர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார். மேலும், மக்களவையில் இருக்க அவருக்கு தகுதியில்லை என சபாநாயகரிடம் கோரிக்கை வைப்பதாகவும் ரமா தேவி தெரிவித்துள்ளார்.
இவர் எப்பொழுதும் இப்படி தான் பெண்களை மதிக்க மாட்டார். பிரச்சாரத்தின் போது கூட மேலும் பாஜக வேட்பாளர் ஜெயபிரதாவின் ஆடை பற்றி அவதூறாக பேசியதை சுட்டிக்காட்டி குற்றம் சாட்டினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
ramadevi mp complaint on bsp mp