எங்க கூட சேருங்க.."திருமாவளவன், பூவை ஜெகன் மூர்த்தி"-யை அழைக்கும் டெல்லி..!!
RamdasAthawale invite thirumavalavan join Republican Party of India
இந்திய குடியரசு கட்சியின் முப்பெரும் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்று. இந்த விழாவில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய அவர் "இந்தியா என்ற நாடு பல்வேறு மக்களை ஒன்றிணைத்து நிற்க காரணமாக இருந்து வருவது அம்பேத்கரின் அரசியல் அமைப்புச் சட்டம் தான்" என பேசினார். மேலும் இந்திய குடியரசு கட்சியுடன் ஒன்றிணைந்து பணியாற்ற வருமாறு திருமாவளவன் மற்றும் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அமைச்சர் நேரடியாக கூட்டணிக்கு அழைத்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் "தலித் என்பது சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் குறிப்பிடும் சொல்லல்ல. ஒடுக்கப்பட்ட மக்கள் என்று பொருள். சிதறடிக்கப்பட்ட மக்கள் என்று பொருள். ஒருங்கிணைக்க முடியாத அளவிற்கு சிதறி கிடக்கும் மக்களுக்கு தலித் என்று பொருள்.
அப்பொழுது இவர்கள் தலித் பேந்தர்ஸ் இயக்கத்தை உருவாக்கிய பொழுது தலித் என்ற சொல்லுக்கு புதிய விளக்கத்தை தந்தனர். யாரெல்லாம் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக, கல்வி ரீதியாக, பின் தங்கியிருக்கிறார்களோ, யாரெல்லாம் சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கிறார்களோ, யாரெல்லாம் விழும நிலை மக்களாக இருக்கிறார்களோ இவர்கள் அனைவரும் தலித்துகள் என்று வரையறை தந்தது நமது ராமதாஸ் அத்வாலே தலைமையில் இயங்கிய தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா என்ற அமைப்புதான்" என பேசி உள்ளார்.
English Summary
RamdasAthawale invite thirumavalavan join Republican Party of India