நண்பரின் திருமண நிகழ்ச்சியில் தான் ராகுல் காந்தி கலந்துக்கொண்டார் - நைட் பார்ட்டி வீடியோவுக்கு காங்கிரஸ் தரப்பில் விளக்கம்.!
randeepsurjewala say about Congress MP Rahul Gandhi participate in night club party
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் ராகுல் காந்தி நிற்பதும், அவரை சுற்றி உள்ளவர்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் அடங்கியுள்ளது.
இந்த வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது. குறிப்பாக ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் முக்வி, "முழுநேர சுற்றுலா பயணி, பகுதி நேர அரசியல்வாதி. பாசாங்குத்தனம் நிறைந்தவர். பயணம் முடிந்து நேரம் கிடைக்கும்போது, போலி கட்டுக்கதைகளையும் குற்றச்சாட்டுகளை உருவாக்கி நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்தி நண்பரின் திருமண நிகழ்ச்சியில் தான் கலந்துக்கொண்டார் என்று, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம் அளித்துள்ளார்.
அவரின் அந்த விளக்கத்தில், "திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது இந்தியாவில் இன்னும் குற்றமாக்கப்படவில்லை. ராகுல் காந்தி நண்பரின் திருமண நிகழ்ச்சியில் தான் கலந்துக்கொண்டார்.
திருமணத்தில் கலந்துகொள்வது சட்டவிரோதம் என்று வருங்காலத்தில் பாஜக அறிவிக்கக்கூடும்" என்று ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
English Summary
randeepsurjewala say about Congress MP Rahul Gandhi participate in night club party