#BigBreaking || தமிழகத்தில் அமலுக்கு வரும் புதிய தடை., சற்றுமுன் சட்டப்பேரவையில் அமைச்சர் அதிரடி.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தற்கொலை மரணங்களை குறைக்கும் வகையில் உயிர் கொல்லியான எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தற்கொலைகளுக்கு முக்கிய காரணியாக இருக்கும் எலி பேஸ்ட் விற்பனையை தடை செய்ய சிறப்பு கவன திட்டம் செயல்படுத்த வழிவகை செய்யப்படும் என்று, தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மானியக் கோரிக்கையை அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தாக்கல் செய்தார்.

இதில் 136 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 116 வது அறிவிப்பாக தமிழகத்தில் எலிகளை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்படும் எலி பேஸ்ட் உயிர் கொல்லி மருந்துகளை, தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகமாக பயன்படுத்துவதால், அதனை விற்பனை செய்வதற்கு தடை விதிப்பது தொடர்பாக சிறப்பு கவன சட்டம் ஒன்று செயல்படுத்துவதற்கு வழிவகை செய்யப்படும் என்று, அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரித்துவரும் தற்கொலை மரணங்களை குறைப்பதற்கு இந்த உயிர்க்கொல்லி பசை எலி மருந்தை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படும் என்ற அறிவிப்பு சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், பெட்டிக்கடைகள் முதல் அனைத்து கடைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடிய அந்த எலி பேஸ்ட் மருந்து  விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rat killer paste ban in tn


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->