இ.பி,எஸ்க்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுக துணை கொறடா.! சபாநாயகரிடம் மனு.!
ravi request to speaker to support eps
வரும் அக்டோபர் 17ஆம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருக்கின்றார். இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கான தடை சட்ட மசோதா கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு பற்றிய அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த அறிக்கை உள்ளிட்டவை இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது.
இத்தகைய சூழலில் இந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அதில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பி.எஸ் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த மனு மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக துணை கொரடா சு.ரவி வலியுறுத்தி சபாநாயகர் அப்பாவிடம் மனு கொடுத்துள்ளார்.
தன்னை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதிவிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கச்சொல்லி ஓ.பி.எஸ் சபாநாயகரிடம் மனு கொடுக்க, அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மனு கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
ravi request to speaker to support eps