ஊராட்சி மன்ற தலைவிக்கு இருக்கை மறுப்பு? கட்சி பாகுபாடா? சாதி பாகுபாடா? அரசு நிகழ்ச்சியில் அதிர்ச்சி சம்பவம்!! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் வடகச்சேரி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், பயணிகள் நிழலகம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கீழ்வேளூர்  திமுக எம்எல்ஏ, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜான் டாம் வர்கீஸ், மாவட்ட ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் கௌதமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அரசு நிகழ்ச்சி என்பதால் தமிழ்த்தாய் வாழ்த்து போடப்பட்ட போது அதனை மதிக்காமல் அமைச்சர் ரகுபதிக்கு பொன்னாடை போர்த்துவதில்லையே திமுக ஒன்றிய செயலாளர் வடகூர் ராஜேந்திரன் முனைப்பு காட்டினார். இதற்கிடையே தனக்கு கடைசியாக பொன்னாடை போர்த்தியதால் தாட்கோ தலைவர் மதிவாணனுக்கும் வடகூர் ராஜேந்திரனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. 

இது ஒரு புறம் இருக்க பட்டியலின வகுப்பைச் சேர்ந்த வடகச்சேரி ஊராட்சி மன்ற தலைவி மகேஸ்வரி இளையராஜாவுக்கு இருக்கை வழங்காமல் நிகழ்ச்சி முடியும் வரை நிற்க வைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திமுக அமைச்சர், மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ என அனைவரும் விழா மேடையில் அமர்ந்திருக்க கூடுதலாக இருக்கைகள் போட்டப்பட்டு மாவட்டத் தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றிய குழு தலைவர் அனுசியா ஆகியோர் அமர வைக்கப்பட்டனர். 

ஆனால் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி மகேஸ்வரி இளையராஜா மட்டும் நிகழ்ச்சியின் மேடையில் ஓரமாக நிற்க வைக்கப்பட்டார்.  வடுகச்சேரி ஊராட்சி மன்ற தலைவி மகேஸ்வரி இளையராஜா அதிமுகவைச் சேர்ந்த என்பதால் இருக்கை ஒதுக்கப்படவில்லை கூறப்படுகிறது. ஆனால் சமுக நீதி பேசும் திமுகவின் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவி அமர வைக்கப்படாததற்கு காரணம் கட்சி பாகுபாடா? சாதி பாகுபாடா? என் சமுக ஆர்வலர்கள் கேள்வி எழுதுகின்றனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Refusal to give a seat to sc panchayat president in govt function


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->