தேர்தலை கண்காணிக்க வட்டார பார்வையாளர்கள் நியமனம்.! - Seithipunal
Seithipunal


கண்காணிப்பை தீவிரப்படுத்த 699 வட்டார பார்வையாளர்களை நியமித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் நூற்று முப்பத்தி எட்டு நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 643 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும், அவை முறையாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்யவும், வேட்புமனுத்தாக்கல், வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல், வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் போன்ற நிகழ்வுகளை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்வதை உறுதிப்படுத்துதவும்,

தேர்தல் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களின் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், வாக்கு எண்ணிக்கை மையத்தில் போதிய அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்,

அவற்றை வட்டார அளவில் கண்காணிக்கவும், மாவட்ட தேர்தல் பார்வையாளர்களுக்கு தேர்தல் நிகழ்வுகளை கண்காணித்து உடனுக்குடன் தகவல்களை தெரிவிக்கவும் மூத்த அதிகாரிகள் 699 பேர் வட்டார பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வட்டார பார்வையாளர்களின் விவரங்கள் http://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிதுப்பதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Regional observers appointed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->