10 நாட்களில் ராஜினாமா செய்!...உ.பி முதலமைச்சருக்கு கொலை மிரட்டல்! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், 10 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்யக்கோரி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில், பாஜக 255 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்த நிலையில், உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், யோகி ஆதித்யநாத் 10 நாட்களில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், இல்லை என்றால் பாபா சித்திக்திற்கு நிகழ்ந்ததை விட மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாபா சித்திக்கை சுட்டுக்கொன்றதை நினைவு படுத்தி, மும்பை போலீசாருக்கு மெசேஜ் மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக அம்மாநில முதலமைச்சர் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Resign in 10 days death threat to up chief minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->