மீண்டும் பிரதமருக்கு வாய்ப்பளித்தால் இந்திய பொருளாதாரம் மூன்றாவது இடத்திற்கு வரும் - ஜே.பி. நட்டா!! - Seithipunal
Seithipunal


நான்கு கட்ட மக்களவைத் தேர்தலுக்கு நிறைவடைந்து ஐந்தாம் கட்டு மக்களை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சி தயாராகி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. 5ம் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. நாளை மறுதினம் ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

 இந்த நிலையில் தேசிய பாஜக தலைவர் ஜே.பி நட்டா இமாச்சலப் பிரதேசத்தின் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜேபி நட்டா பேசுகையில், மோடியின் ஆட்சியில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என அரசியல் அமைப்பு சட்டத்தில் எழுதி உள்ளார் அம்பேத்கர். மோடியின் தலைமையிலான ஆட்சியில் பதினோராவது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை ஐந்தாவது இடத்திற்கு கொண்டு வந்துள்ளார். பிரதமருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்திய பொருளாதரத்தை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வந்து விடுவார் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Return Modi government India economic 3rd place


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->