தெலுங்கில் "பாரத தேசம்" தானே! பெயர் மாற்றுவதில் தவறில்லை! - ஆந்திர அமைச்சர் ரோஜா! - Seithipunal
Seithipunal


ஆங்கில மொழியில் "இந்தியா" என்றால் தெலுங்கு மொழியில் "பாரத தேசம்"!

குடியரசு தலைவர் ஜி20 மாநாட்டில் பங்குபெறும் முக்கிய பிரமுகர்களுக்குவரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி வழங்க உள்ள விருந்துக்காக அனுப்பிய அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதில் பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் விவாத பொருளாக மாறி உள்ளது.

மத்திய பாஜக அரசு இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்திக் சிதம்பரம் மற்றும் திமுகவைச் சேர்ந்த டி.ஆர் பாலு உள்ளிட்ட தலைவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பாரதம் என்ற வார்த்தையை உள்ளதால் அதை பயன்படுத்துவதில் தவறில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா இன்று திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாரதம் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த அவர் "பாரதம் என்ற பெயரும் நன்றாக தான் உள்ளது. ஆங்கில மொழியில் இந்தியா என்பது போல் தெலுங்கு மொழியில் பாரத தேசம் என அழைக்கிறோம். இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்றுவதில் தவறு ஏதும் கிடையாது" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Roja said nothing wrong in changing name India to Bharat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->