கருவாடு மீனாகாது, கறந்த பால் மடிப்புகாது - சசிகலாவுக்கு ஆர்.பி உதயகுமார் பதிலடி! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரிடம், சசிகலா அதிமுகவை ஒன்றிணைக்க உள்ளதாக தொண்டர்களை சந்தித்து வருகிறார். இது குறித்து உங்களின் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ஆர் பி உதயகுமார், கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. இப்போது இருக்கிற நிலைமை இதுதான்.

இப்படியான நிலையில் அதிமுக தொண்டர்கள் மிகவும் கவனமாகவும், விழிப்புணர்வோடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டிய தருணம் இது.

நான் யாரையும் குறைந்து குறைத்து மதிப்பிட்டோ, அவதூறு பரப்புவதற்காகவோ இதை சொல்லவில்லை. வரலாறை நான் நினைவு கூற விரும்புகிறேன். 33 ஆண்டுகாலம் அம்மாவோடு இருந்து, ஆட்சி அதிகாரத்திலேயே பங்கெடுத்தவர்கள் என்று தனக்குத்தானே பிரச்சாரம் செய்யும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் அவர்கள், தாங்கள் சார்ந்த சமுதாய மக்கள் இன்னும் வறுமை கோட்டுக்கு கீழ் தான் உள்ளார்கள், அவர்களுடைய குடும்ப வாழ்வாதாரத்திற்கும் அவர்கள் படுகின்ற கஷ்டத்திற்கும் தீர்வு காண்பதற்கு ஏதாவது முயற்சி எடுத்தார்களா 

சசிகலாவின் சமூகத்தை சார்ந்தவர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கி, வறுமை சூழலில் சிக்கி சின்னாபின்னமாகி செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதை நாம் நேரடியாகவே கிராமத்தில் பார்க்கின்ற பொழுது கண்களில் கண்ணீர் வருகின்றது. அந்த கண்ணீரை துடைப்பதற்கு இவர்கள் மனசாட்சி தொட்டு சொல்லட்டும் இவர்கள் என்ன செய்தார்கள் என்று?

ஆனால் இந்த மக்களின் பின்புலத்தை காட்டி தான் இவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டார்களே தவிர, அந்த சாமானிய மக்களுக்கு ஒரு சொம்பு தண்ணீர் கூட கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஒருவேளை இந்த சமுதாயம் மக்களுக்கு அவர்கள் நல்லது செய்திருந்தால் இந்த நாடே திரண்டு அவர் பின்னால் நின்றிருக்கும்" என்று ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RP Udaya Kumar reply to sasikala ADMK issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->