ரூ. 26.61 கோடி ஊழல் - எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு!..பின்னணியில் இருப்பவர்கள் யார் ? - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியில் கடந்த 2018ம் ஆண்டு மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.   அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி ரூ.26.61 கோடி முறைகேடு செய்ததாக, அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்தது. 

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் குறிப்பிட்டுள்ள புகாரில், மழைநீர் வடிகால் அமைக்க ரூ.290 கோடி மதிப்பீட்டிலும், சாலைகள் அமைப்பதற்காக ரூ.246 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் ஒப்பந்தாரர்களை முடிவு செய்வதில் விதிமீறல் நடந்துள்ளதாகவும், எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும், இதன் மூலம் ரூ.26.61  அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து  இந்த புகாரை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வரும் நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி  மற்றும் சென்னை மாநகராட்சி சேர்ந்த 11 பொறியாளர்கள் மீது ரூ. 26.61  முறைகேடு செய்ததாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் முருகன், கண்காணிப்பு பொறியாளர் சின்னச்சாமி, தலைமை பொறியாளர் நந்தகுமார், முதன்மை பொறியாளர் புகழேந்தி, செயற்பொறியாளர்கள் சரவணமூர்த்தி, பெரியசாமி, சின்னதுரை, நாச்சன், முன்னாள் செயற்பொறியாளர் சுகுமார், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் மீது ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs. 26.61 crore corruption Anti corruption department case against sp Velumani Who are behind it


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->