மணிப்பூர் : அமைதியை நிலைநாட்ட அரசு முன்வர வேண்டும் - மோகன் பகவத்!
RSS Leader Mohan Bagavat Speaks About Manipur
மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி என்ற இரண்டு இனத்தைச் சேர்ந்த மக்களிடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டது. கடந்த ஓராண்டாக தொடர்ந்து வரும் இந்த மோதலில் இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மெய்தி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவது தான் இந்த கலவரத்தின் மூலமாக அமைந்தது. மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கினால் அவர்கள் தங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து விடுவார்கள் என்று குக்கி இன மக்கள் அஞ்சினர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஆரம்பமாகி இன்று வரை தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு மணிப்பூரில் உள்ள பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மணிப்பூரில் ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு முகாம்களில் சென்று தங்கியுள்ளனர். இந்நிலையில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவார் ஸ்மிருதி பவன் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அதில் அவர், "மணிப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அமைதி நிலவியது. இப்போது அங்கு மக்கள் அமைதிக்காக காத்திருக்கின்றனர். அங்கு தற்போது மீண்டும் வன்முறை தலை தூக்கியுள்ளது. அரசு இவ்விவகாரத்தில் முன்னுரிமை எடுத்து அங்கு அமைதியை நிலை நாட்ட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
English Summary
RSS Leader Mohan Bagavat Speaks About Manipur