'மோடியின் ரஷ்யா வருகை ... மேற்கத்திய நாடுகளுக்கு வயிற்றெரிச்சல் ' - ரஷ்யா கருத்து..!!
Russia Speaks About Indian PM Modi Russia Visit
பிரதமர் மோடி ரஷ்யாவில் நடக்கும் இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று (ஜூலை 8) ரஷ்யா செல்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் ரஷ்ய வருகை குறித்து மாஸ்கோவின் செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, "இந்திய பிரதமரின் ரஷ்ய வருகையை மேற்கத்திய நாடுகள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து, பொறாமை உணர்வோடு உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஆனால் எங்களுக்கு இந்திய பிரதமர் மோடியின் இந்த பயணத்தை நாங்கள் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நல்லுறவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயணமாக பார்க்கிறோம். இந்திய பிரதமரின் இந்த பயணத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் பிரத்தியேகமாக சந்தித்துப் பேசவுள்ளனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வரும் இந்த இந்திய - ரஷிய உச்சி மாநாடு கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்றது. அப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இதில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்தார். இதையடுத்து கடந்த 2 வருடங்களாக இந்த உச்சி மாநாடு நடைபெறவில்லை.
இந்நிலையில் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த உச்சி மாநாடு ஜூலை 8 மற்றும் 9 ஆகிய இரு தினங்கள் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரஷியா - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி ரஷிய பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே உலக நாடுகளிடையே இந்திய பிரதமரின் இந்த ரஷிய பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது.
English Summary
Russia Speaks About Indian PM Modi Russia Visit