அதிமுக பெண் கவுன்சிலர்களை திமுகவினர் கடத்திவிட்டதாக, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.!  - Seithipunal
Seithipunal


நாமக்கல்லுக்கு அருகே அதிமுக பெண் கவுன்சிலர்களை மிரட்டி, திமுகவினர் கடத்தியதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிமுக தலைவர் ஜெகநாதன் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர திமுக கூட்டம் ஒன்று நடத்த திட்டமிட்டிருந்தது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற இருந்த இந்த கூட்டத்தில் பங்கேற்க இருந்த அதிமுக கவுன்சிலர்கள் சங்கீதா மற்றும் பூங்கொடியை, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் புறவழிச்சாலையில் வைத்து அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றதாக பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிமுக தலைவர் ஜெகநாதன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று, திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த சங்கீதாவையும், பூங்கொடியும் மிரட்டி பணிய வைத்து, திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுவதாக சொல்லி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem panamarathupatti admk counselor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->