மணல் கடத்தல் : ஊராட்சி மன்றத் தலைவருக்கு தொடர்பா? - Seithipunal
Seithipunal


கூத்தனுர் கிராம நிர்வாக அலுவலர் கோகுல், பந்தநல்லூர் காவல் நிலையத்தில், கொடியாலத்தில் அரசு அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தப்படுவதாக புகாரளித்துள்ளார். முன்னதாக திருவிடை மருதூர் போலீசாருக்கும் கொடியாலத்தில் மணல் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையில் போலீசாரும், வருவாய் துறையினரும் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு மணல் கடத்தியுள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து டிஎஸ்பி ஜாபர் சித்திக்கிடம் கேட்ட போது, "கொடியாலத்தில் தொடர்ந்து மணல் கடத்தி விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்படி நேரில் ஆய்வு செய்தபோது 4 ஏக்கர் பரப்பளவில் மணல் திருடி கடத்தப்படுவது தெரிய வந்தது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு லாரி, 2 ஜேசிபி, 3 டிராக்டர் உள்ளிட்ட 6 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம்" என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sand Smuggling Panchayat President Abscond


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->