காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சசிதரூர் மகன்! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல் 14ஆம் தேதி நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இதனால் கட்சியின் புதிய தேசிய தலைவராக மல்லிகர்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சசி தரூரின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு முன் வைத்தனர். உத்தரப்பிரதேசத்தில் பதிவான வாக்குகளில் அப்பட்டமான முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டை எழுந்துள்ளது. உத்திரபிரதேசத்தில் பதிவான வாக்குகளை செல்லாத வாக்குகளாக அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையர் மதுசூதனனுக்கு கடிதம் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சசிதரூர் தனது வாழ்த்தை தெரிவித்து இருந்தார். 

இந்த தேர்தல் முடிவு குறித்து சசி தரூர் மகன் இஷான் தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் "என் தந்தையை நினைத்து பெருமை கொள்கிறேன். கட்சியில் தந்தைக்கு எதிராக பல சக்திகள் செயல்பட்டு இருந்தாலும் கூட போட்டியில் நேர்மையான சண்டை போட்டு, தலைவர் தேர்தலை கடினமாக்கியுள்ளார். ஒரு கற்பனைக்கு இதுவே ஒரு அமெரிக்கா பாணி தேர்தலாக இருந்தால் தேர்தல் முடிவு வேறாக அமைந்திருக்கும்" என பதிவிட்டுள்ளார். சசி தரூர் மகனின் இந்த கருத்து தற்பொழுது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasidharoor son made controversial comments about Congress president election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->