போயஸ் கார்டனில் அமைதியாக இருந்தால் நல்லது.. சசிக்கலாவை எச்சரித்த அதிமுக பிரபலம்
sasikala- poesgarden- rest- rajansellppa - eps
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அடைந்த தோல்வியை அடுத்து சசிகலா. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்வியை உறுதிசெய்ய அதிமுகவின் அணிகளை ஒன்றிணைப்பேன் என்று கூறி, தென்காசி மாவட்டத்தில் தனது நான்கு நாள் “அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்கு அதிமுக தரப்பில் இருந்து பல்வேறு தலைவர்கள் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலா அமைதியாக இருந்தால், எப்படி அண்ணா வெற்றிபெற்று பெரியாரிடம் வாழ்த்து பெற்றாரோ, அதேபோல் அண்ணன் எடப்பாடியார் 2026 ல் வெற்றி பெற்று அவரை சந்தித்து இருப்பர். ஆனால் அவர் அதிமுகவை சீர்குலைக்க தென்காசி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் அவருடன் ஒரு அதிமுக தொண்டர்கூட இல்லை. சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் தென்காசியை மட்டும் ஏன் குறிவைக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதிமுகவிற்கு எதிராக ஓபிஎஸ் பாதக செயலில் ஈடுபட்டதால்தான் இன்று அவரால் அதிமுக கரை வேட்டிக்கூட கட்ட முடியவில்லை.
தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவியை பெயருக்கு பின்னால் போடுவதை எடப்பாடியாரிடம் நாங்கள் சுட்டிக்காட்டியபோது, அவர்களுக்கு உண்டான மரியாதையை கொடுப்போம் என்று எங்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் அதிமுக ஒரு சாதிக்கனா கட்சி இல்லை என்றும் தெரிவித்தார்.
நீங்கள் போயஸ் கார்டனில் அமைதியாக இருந்தால் உங்களுக்கான மரியாதை கிடைக்கும். தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டால் தொண்டர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று ராஜன் செல்லப்பா எச்சரித்தார்.
English Summary
sasikala- poesgarden- rest- rajansellppa - eps