அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., மரணம்.! சசிகலா இரங்கல்.!
SASIKALA MOURNING TO Ex MLA ANNAMALAI Dead
ஆலந்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, P.S. அண்ணாமலை இன்று இயற்கை எய்தினார்.
அவரின் மறைவுக்கு சசிகலா இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "அதிமுகவின் மூத்த நிர்வாகியும், ஆலந்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, திரு. P.S. அண்ணாமலை (வயது 77) அவர்கள், இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
கழகத்தின் மீதும், நம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீதும், மிகுந்த பற்றுக் கொண்டவர்.
நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதன் முதலாக தமிழக முதலமைச்சராக அரியணையில் அமர்ந்த போது, திரு.அண்ணாமலை அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக திறம்பட செயலாற்றினார். கழகப் பணிகளை மிகவும் சிறப்பாகவும், நேர்மையோடும் செய்யக்கூடியவர்.
திரு. அண்ணாமலை அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். என்று சசிகலா அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
English Summary
SASIKALA MOURNING TO Ex MLA ANNAMALAI Dead