அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சசிகலாவின் செய்திக்குறிப்பு!  - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், "தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மாவட்ட கழக செயலாளருமான கே டி ராஜேந்திர பாலாஜி அவர்களின் தந்தை தவசி லிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

அன்பு சகோதரர் திரு கே டி ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும், இந்த இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியையும் தர வேண்டும் என, எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

தனது தந்தை தந்தையை இழந்து வாடும் கேடி ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்" என்று சசிகலா தெரிவித்துள்ளார்.


அதிமுகவை சேர்ந்தவரும், அக்கட்சியில் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் ராஜேந்திர பாலாஜிக்கு, சசிகலா இரங்கல் தெரிவித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தன்னை ஒதுக்கிய போதிலும் தானே முன்சென்று சசிகலா துக்கம் விசாரித்து உள்ளார். அதே நிலையில் இருக்கும் ஓபிஎஸ் இரங்கல் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala mourning to KD Rajendrabalaji father death 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->