முதலில் ஓபிஎஸ்! அடுத்து சசிகலா! ஒரே இடத்தில் வெவ்வேறு தேதியில் கொண்டாடப்போகும் நிகழ்வு! - Seithipunal
Seithipunal


கீழ்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் வரும் 23ந் தேதி சசிகலாவும், 21 ந் தேதி ஓபிஎஸ் -யும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாட உள்ளனர். 

முன்னாள் மூலவர் ஓபிஎஸ் விடுத்துள்ள அறிவிப்பில், "உலகத்தைக் காக்க தன்னையே தந்த தியாகத்தின் திருவுருவமான இயேசு பெருமானின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பெருவிழாவை ஆண்டுதோறும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொண்டாடுவதை மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பெருவிழாவினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை, கீழ்ப்பாக்கம், ஹால்ஸ் சாலை, நேர்ச்சை திருத்தல மாதா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் 21-12-2022 (புதன்கிழமை) மாலை 5.00 மணியளவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் நடத்த உள்ளார்கள்.

மேற்படி நிகழ்ச்சியில், கிறிஸ்தவ பெருமக்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்." 

இவ்வாறு அந்த அறிவிப்பில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala ops Christmas


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->