''2026 தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன்'' - சவால் விட்ட சசிகலா.!
Sasikala speech viral
வருகின்ற மக்களவைத் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது மக்கள் தான் என சசிகலா தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தெரிவித்திருப்பதாவது,
வருகின்ற மக்களவைத் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது மக்கள் மட்டும் தான். தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க என்ன என்பது தெரியவரும். தமிழக அரசு தேர்தல் காரணம் சொல்லி அதிகாரப்பூர்வமான செயல்களில் ஈடுபடாமல் உள்ளது.
தூத்துக்குடியில் துப்புரவு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை என்ன செய்கிறது என்ன தெரியவில்லை.
இது போன்ற எந்த தவறும் அ.தி.மு.கவில் நடந்ததில்லை. 2026 தேர்தல் என்பது எங்களுக்கும் திமுகவுக்கும் நேரடியான போட்டி. அந்த தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன்.
திமுக என்ன ஆகும் என்பதை கணித்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவரை ஆட்சி செய்தவர்களில் எந்த ஆட்சி மக்களுக்கு பயன்பட்டது. ஓ பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
அவரும் அ.தி.மு.கவை சேர்ந்தவ தான். எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க ஒன்று சேர்ந்து ஒரே அணியில் போட்டியில் மாபெரும் வெற்றியை பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.