அவர் "குடும்பம் கொள்ளை அடிக்க" பொய் வழக்கு".!! - போட்டு உடைத்த சவுக்கு சங்கர்.!! - Seithipunal
Seithipunal


காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலரை தவறாக பேசியதாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் நேற்று காலை தேனியில் கோவை சைபர் கன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கரை அழைத்துச் சென்ற போலீசு வாகனம் தாராபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கியதை அடுத்து அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் கோவைக்கு சென்றனர். 

கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர் கோவை குற்றவியல் நடுவர் மன்றம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதியிடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் குடும்பம் கொள்ளை அடிக்க தான் நடத்தி வரும் சவுக்கு மிக்க தடையாக இருப்பதால் மேலும் மேலும் பொய் வழக்கு பதிவு செய்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.

நீதிபதி முன்னேறு ஆச்சரியப்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை போலீசார் வெளியே அழைத்து வரும்போது செய்தியாளர்களை சந்திக்க விடாமல் காவல்துறையினர் வாகனத்தில் ஏற்ற முயற்சித்தனர் அப்போது சவுக்கு சங்கர் இவ்வாறு முழங்கியபடி வாகனத்தில் ஏறினார்.

இதற்கிடையே சவுக்கு சங்கருக்கு வரும் மே 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக சவுக்கு சங்கர், ராஜா ரத்தினம் மற்றும் அவருடைய கார் ஓட்டுனர் ராம் பிரபு ஆகியோர் மீது போதை பொருள் வைத்திருந்ததாக தேனி மாவட்ட பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Sankar allegation on MKStalin family


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->