நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளுக்கு சிக்கல்? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
SC directs EC to submit election fund bond datas
இந்தியாவில் அரசியல் கட்சிகள் பெரும் நிதியை முறைப்படுத்தும் வகையில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் குடிமகன் அல்லது இந்தியாவில் செயல்படும் ஒரு அமைப்பு தேர்தல் பத்திரங்கள் வாங்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது. இந்திய நிதிச் சட்டம் 2017 மூலம் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்திய ரிசர்வ் வங்கி சட்டம்-1934, வருமான வரிச் சட்டம்-1961, மக்கள் பிரதிநிதித்துவத்தவச் சட்டம்-1951 ஆகியவை திருத்தப்பட்டன.
இதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வரம்பற்ற கட்டுப்பாட்ட நிதியுதவிக்கான கதவுகள் திறக்கப்பட்டதால் இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனதில் மாநிலங்களவையின் ஒப்புதல் தேவையில்லாத பண மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது நிதி சட்டத்தை பண மசோதா நிறைவேற்ற முடியாது என்பதால் என்பதா அந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
விசாரணைக்கு பிறகு அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர் கவாய், ஜே.பி பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமைப்பு விசாரணை செய்தது.
இந்த வழக்கு மீண்டும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தேர்தல் நிதி பத்திரங்கள் திட்டம் தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அந்த காலகட்டத்திற்கு மட்டும்தான் என்று இந்திய தேர்தல் ஆணையம் புரிந்து கொண்டதாக வாதிட்டர்.
இதனைக் கேட்ட நீதிபதிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதிகள் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான தேர்தல் நிதி பத்திர நன்கொடை தொடர்பான அனைத்து தரவுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
English Summary
SC directs EC to submit election fund bond datas