அதிமுக + எஸ்டிபிஐ கூட்டணி.. "திமுகவில் இது நடக்காது".!! நெல்லை முபாரக் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


எஸ்டிபிஐ கட்சியின் "வெல்லட்டும் மதச்சார்பின்மை" மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய எஸ்டிபிஐ மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகி, தமிழ்நாடு அரசியல் சூழலை எடப்பாடி பழனிசாமி மாற்றி காட்டியுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து மதச்சார்பின்மையை நீக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என சாடியுள்ளார்.

மதச்சார்பின்மையை நிலைநாட்ட அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் திமுகவில் உயர்பதவிகளில் இஸ்லாமிய மக்கள் யாரும் நியமிக்கப்படவில்லை விமர்சனம் செய்துள்ளார். மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது  எனவும், அதிமுகவின் உயர் பதவிகளில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது எனவும்,  எடப்பாடி பழனிசாமி போல் இஸ்லாமிய மக்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை பாராட்டி பேசியுள்ள நெல்லை முபாரக் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sdpi nellai mubaraq talk about alliance with admk


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->