அடுத்த ட்விஸ்ட்! திமுகவுக்கு எதிரா திரும்பும் இஸ்லாமிய கட்சிகள்! எடப்பாடியிடம் முக்கிய கோரிக்கை!
SDPI requests EPS to bring special resolution for Islamic prisoners
தேர்தல் கூட்டணியில் இருந்து பாஜகவை அதிமுக கழட்டிவிட்ட நிலையில் பல அரசியல் கட்சிகள் அதனை வரவேற்று இருந்தன. இதனால் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் இழந்த சிறுபான்மையினர்களின் வாக்குகளை மீண்டும் அதிமுகவிற்கு கொண்டு வருவதில் எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார்.
மேலும் சிறையில் வாடும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில் திமுக அரசு மெத்தின போக்குடன் செயல்படுவதோடு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இஸ்லாமிய கைதிகளின் விடுதலைக்கு எதிராக கூறிருந்த கருத்து இஸ்லாமியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இஸ்லாமிய கைதிகள் விடுதலை குறித்து முறையிட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் நேரம் ஒதுக்குமாறு 2 முறை கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரம் ஒதுக்காததால் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிச்சாமி தமிமுன் அன்சாரிக்கு நேரம் ஒதுக்கி சேலம் இல்லத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த அக்டோபர் 3ம் தேதி சேலம் நெடுஞ்சாலை நகரில் இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை தமிமுன் அன்சாரி சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மற்றும் எஸ்.பி வேலுமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி நீண்ட நாட்களாக சிறையில் இருக்கு இஸ்லாமிய கைதிகள் விடுதலை குறித்து முன்னாள் முதல்வர் மற்றும் எதிர் கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசியதாகவும், அரசியல் குறித்து பேசவில்லை எனவும் தெரிவித்தார்.
இஸ்லாமிய கட்சியை சேர்ந்த நபர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் மற்றொரு அரசியல் கட்சியான எஸ்.டி.பி.ஐ அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இதே கோரிக்கையை விடுத்துள்ளது.
இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக மௌனம் காக்கும் திமுக அரசுக்கு எதிராக சட்டமன்ற கூட்டத் தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
SDPI requests EPS to bring special resolution for Islamic prisoners