"சீமான் காட்டம்!.....காவல்துறை உயர் அதிகாரி பட்டப்பகலில் தாக்கப்படும் அளவிற்கு சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது!" - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்த காளிக்குமார் என்பவர், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காளிக்குமார் கொலை சம்பவத்தை கண்டித்தும் இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி அருப்புக்கோட்டை - திருச்சுழி சாலையில் அவரின் உறவினர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் திடீரென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காயத்ரியின் தலைமுடியை இழுத்து அவரை தாக்க முற்பட்டார். பின்னர் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு 7 பேரை கைது செய்து,  தலைமறைவான ஒருவரை  தேடி வருகின்றனர். 

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள செய்தியில், பெண் காவல் துணை கண்காணிப்பாளர்  காயத்ரி அவர்களின் தலை முடியை இழுத்து கடுமையாகத் தாக்கப்பட்ட நிகழ்வு வன்மையான கண்டனத்துக்குரியது. போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மதுபோதையில் இருந்ததே இக்கொடுந்தாக்குதலுக்கு முக்கிய காரணம் எனும்செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தி.மு.க-வின் மூன்றாண்டு கால ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை உயர் பெண் அதிகாரி ஒருவரே பட்டப்பகலில் தாக்கப்படும் அளவிற்கு சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. கார் பந்தயம் போன்ற ஆடம்பரங்களில் கவனம் செலுத்துகின்ற அரசால் எப்படி காவல்துறையைச் சீரமைப்பதில் கவனம் செலுத்த முடியும்?.

ஆகவே, காவல் துணை கண்காணிப்பாளர் சகோதரி காயத்ரி அவர்களைத் தாக்கியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, சமூகக் குற்றங்களைத் தடுத்து, சட்டம் - ஒழுங்கைச் சீர்படுத்த முதலில் தி.மு.க அரசு இதற்கு மேலாவது மதுவிற்பனையைக் கைவிட்டு, மதுக்கடைகளை இழுத்து மூடவேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seaman Show!…..law and order has broken down to the extent that a top police official was assaulted in broad daylight


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->