இதெல்லாம் நல்லதல்ல - எச்சரித்த டிடிவி! அதிர்ச்சியில் சீமான்! - Seithipunal
Seithipunal



கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் பிரகாஷ் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் செய்திக்குறிப்பில், "பத்திரிகையாளர் பிரகாஷ்  உள்ளிட்ட குழுவினர் தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க ஆட்சியில் ஊடகத்துறையினர் தொடர்ந்து மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடிப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல." என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

 

இதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற மூத்த பத்திரிகையாளர் பிரகாசு, ஒளிப்பதிவாளர் அஜித் ஆகியோர் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

பத்திரிகையாளர்களையே தாக்கி, அடக்குமுறைகளைப் பாய்ச்சி, அழுத்தங்களும், நெருக்கடிகளும் கொடுக்கப்படுகிறது என்றால், மாணவி மரணத்தில் என்னவெல்லாம் நிகழச் சாத்தியப்பட்டிருக்கும் என்பதை மக்களும், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும், நீதியரசர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். 

இனிமேலாவது, தற்கொலை எனும் கோணத்திலேயே வழக்கின் விசாரணையைக் கொண்டு செல்லாது, நேர்மையான விசாரணையை நடத்தி, தொடர்புடையக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் எனவும், பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்களை கண்டறிந்து கடும் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்" என்று தமிழக அரசை சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman and TTV Condemn to kallakurichi issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->