"சிறுபான்மையினர்கள் என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன்".! - சீமான் ஆவேசம்.!!
Seeman angry in press meet over question on minorities
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் பெரும்பான்மை மக்கள்தான் அரசியல் கட்சிகளின் வெற்றிகளை தீர்மானிக்கிறார்கள் என கேள்வி எழுப்பும் பொழுது குறுக்கிட்ட சீமான் "பெரும்பான்மை சிறுபான்மை என எப்படி சொல்ற? பெரும்பான்மை என எதை வைத்து சொல்றீங்க?
சாத்தான் என்ற சொல் பைபிளிலும், குர்ஆனிலும் உள்ளது. அந்த வார்த்தை நான் சொல்லவில்லை நபிகள் சொன்னது, இயேசு சொன்னது தானே.? சாத்தானின் செயல்கள் எது? அநீதிகளை தற்போது ஆட்சியாளர்கள் செய்து செய்கிறார்கள் தானே. அநீதி இழைக்கிறவனுக்கு ஆதரவாக நிற்பவன் யார்.?
குர்ஆன் சாத்தான்களின் நண்பர்கள் என சொல்கிறது. நான் சாத்தான்களின் குழந்தைகள் என சொன்னேன். அது வேண்டுமானால் தவறு என சொல்லலாம். நீங்கள் சிறுபான்மை, பெரும்பான்மை என எதை வைத்துக் கூறுகிறீர்கள். ஸ்டாலின் பெரும்பான்மையா? சிறுபான்மையா? மதத்தை வைத்து மனித கூட்டத்தை கணக்கிட்டது எங்காவது இருக்கா?
ஐரோப்பிய யூனியன் முழுவதும் கிறிஸ்தவன் தான் ஏன் ஒன்றாக இல்லை? ஏன் இத்தனை நாடு? ஏனென்றால் அங்கு மொழிவாரிய தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் ஏன் பிரிந்தது? பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் ஏன் பிரிந்தது? இதிலிருந்து என்ன தெரிகிறது மதத்தை விட, சாதியை விட, எல்லா அடையாளங்களை விட மொழி, இனம் தான் பெரியது.
அப்படி என்றால் இங்கு இருக்கும் இஸ்லாமியனும், கிறிஸ்துவனும் தமிழன் தான். பெரும்பான்மை மக்கள் கொண்ட தேசிய இனத்தின் மகன். வந்தவன் போனவன் எல்லாம் சிறுபான்மையினம் என பேசினால் செருப்பை கழட்டி அடிப்பேன். வெறி கொண்டு இருக்கிறேன். யார் சிறுபான்மையினர்?
மதம் மாறிக்கொள்ளக் கூடியது. மொழியும், இனமும் மாறிக்கொள்ள முடியாதது. மொழியையும், இனத்தையும் வைத்து தான் உலகம் முழுவதும் அடையாளத்தை கணக்கிடுகிறார்கள். இன்று இந்துவாக இருப்பவர்கள் நாளை இஸ்லாமியராக மாறிவிடலாம். இஸ்லாமியராக இருப்பவர்கள் நாளை கிருத்துவராக மாறிடலாம். ஆனால் தமிழனாக இருக்கும் நான் தெலுங்கனாக மாற முடியுமா.? தேவையில்லாமல் சிறுபான்மையினர் என்ற வார்த்தையை உபயோகப்படுத்த வேண்டாம்" என ஆவேசமாக பேசினார். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.
English Summary
Seeman angry in press meet over question on minorities